தளபதி68ல் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? முக்கிய அப்டேட் வெளியிட்ட ஏஜிஎஸ்
தளபதி விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆகி 4 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அடுத்து விஜய் தளபதி68 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க போகிறார்.

நாளை வெளியாகும் வீடியோ
தளபதி 68 படத்தின் பூஜை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற முழு விவரமும் அந்த வீடியோவில் இருக்கும் என ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார்.
நாளையில் இருந்து தளபதி68 அப்டேட் வர தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
As promised #Thalapathy68 updates will start tomorrow. 2024 will belong to us ❤️ @actorvijay Sir, @vp_offl @thisisysr @Ags_production @aishkalpathi The Pooja video will reveal cast and crew details you have been waiting for at 12:05 pm tomorrow ???? pic.twitter.com/FWWgithKlC
— Archana Kalpathi (@archanakalpathi) October 23, 2023