தளபதி 68 இந்த ஆங்கில படத்தின் காப்பியா.. வெங்கட் பிரபு என்ன இதெல்லாம்

Kathick
in திரைப்படம்Report this article
வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு மீது எப்போதுமே பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், இவர் எடுக்கும் படங்கள் ஆங்கில படங்களின் காப்பியாக இருக்கிறது என்பது தான்.
சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் மீது இந்த சர்ச்சை உள்ளது. இதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் மீதும் இதே சர்ச்சை எழுந்துள்ளது.
தளபதி 68 காப்பியா
அதாவது, தளபதி 68 திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வில் ஸ்மித் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜெமினி மேன் திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இப்படத்தில் எப்படி இரண்டு வேடத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பாரோ, அதே போல் தான் தளபதி 68 படத்தில் விஜய்யும் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, லூப்பர் படத்தை தழுவி தான் தளபதி 68 உருவாகுகிறது என கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜெமினி மேன் படத்தை இன்ஸ்பைர் பண்ணி வெங்கட் பிரபு எடுக்கிறார் என்கின்றனர்.