தளபதி 68ல் ஏற்பட்ட சிக்கல்.. பூட்டிய கதவை கூட திறக்காமல் வேலை செய்யும் வெங்கட் பிரபு
தளபதி 68
லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதை டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறது. சில தகவல்கள் இந்த டிஸ்கஷனில் இருந்து வெளியே கசிந்ததால், தன்னுடைய துணை இயக்குனர்களை திட்டித்தீர்த்தார் வெங்கட் பிரபு. இதன்பின் ஹோட்டல் ரூம் கதவை கூட திறக்காமல் முழுமூச்சாமாக தளபதி 68 படத்தின் வேளையில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
சிக்கல்
இப்படியொரு நிலையில், விஜய்யிடம் கூறிய ஒன் லைன் முழு திரைக்கதையாக உருவாக்க வெங்கட் பிரபு மற்றும் அவருடைய துணை இயக்குனர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறதாம். என்ன செய்வது என அவர்கள் குழம்பி போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி ஒருவேளை இந்த கதையின் திரைக்கதை சரியாக வரவில்லை என்றால், வெளியே இருந்து புதிய கதையை வாங்கி விஜய்யை வைத்து படமெடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், கண்டிப்பாக விஜய்யை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபு கண்டிப்பாக விட்டுக்கொடுக்கவே மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே ஏகே 62ல் இப்படியொரு குழப்பம் ஏற்பட்டதால் தான் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான பொங்கல் வின்னர் துணிவா? வாரிசா?.. பல மாதங்களுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri