தளபதி 68ல் மொத்தம் இத்தனை பாடல்களா.. அதில் இந்த நட்சத்திரமும் ஒரு பாடலை எழுதியுள்ளாரா
தளபதி 68
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபுவுடன் விஜய் இப்படத்தின் மூலம் முதல் முறையாக கைகோர்க்கிறார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

டைம் ட்ராவல் கதைக்களத்தில் தான் இப்படத்தை வெங்கட் பிரபு உருவாக்கி வருவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், அதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னெவென்றால், இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறப்போவதாக தெரிவிக்கின்றனர்.
அதில் ஒரு பாடலை இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும், பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தானாம்.

இப்படத்தின் படப்பிடிப்பே முதன் முதலில் பாடல் காட்சியில் இருந்து தான் துவங்கியது. மேலும் இன்னும் 4 பாடல்கள் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.