தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி.. 5 வருடங்களுக்கு பின் நடக்கும் விஷயம்
தளபதி 68
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் தேதி
இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தளபதி 68 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்த நிலையில், அதன்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய மூன்று திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகவில்லை.
மேலும் அடுத்ததாக வெளிவரவிருக்கும் லியோ படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளிவரவில்லை. இதன்மூலம் பிகில் படத்திற்கு பின் 5 ஆண்டுகள் கழித்து ரசிகர்களுக்கு விருந்தாக தளபதி 68 திரைப்படம் தான் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் படத்திற்காக ஃபகத் ஃபாசில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா