தளபதி 68 படத்தை எந்த தேதியில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.. தீபாவளிக்கு கிடையாதாம்..
தளபதி 68
வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்களால் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. அது தளபதி 68 படத்தில் அமைந்துள்ளது.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் First லுக் வருகிற புத்தாண்டு அன்று வெளியாகும் என்கின்றனர். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ரிலீஸ் தேதி
இந்நிலையில், தளபதி 68 படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது தீபாவளிக்கு சில மாதங்களுக்கு முன்பே, விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அப்படி ஜூன் 22 விஜய் பிறந்தநாள் அன்று தளபதி 68 வெளிவந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
