தளபதி 68 படத்தின் பூஜை எப்போ.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் விஜய்
விஜய் தற்போது நடித்து வரும் லியோ இந்திய திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடிக்கு செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால் எதிர்பார்த்ததை விட இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்கின்றனர். லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 68.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட VFX பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி மூவரும் வெளிநாடு சென்றிருந்தனர். அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
ஷூட்டிங் அப்டேட்
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என தகவல் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படத்தின் பூஜை அக்டோபர் 1ல் நடக்கவுள்ளதாம். அதற்கு அடுத்த நாளில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் பிரியங்கா மோகன் தான் இப்படத்தின் கதாநாயகி என ஏறக்குறைய உறுதியான தகவல் கூறப்படுகிறது.
மேலும் பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக வரும் செய்திகள் இன்னும் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri