தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான்.. என்ன தெரியுமா, இதோ
தளபதி 68
லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிறகு இயக்குகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா பல ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தளபதி 68 திரைப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இதுதான் தலைப்பா
இந்நிலையில், தளபதி 68 படத்திற்கு CSK தலைப்பு வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். IPL பிரபலமான அணியின் பெயரை விஜய்யின் படத்திற்கு வெங்கட் பிரபு வைத்துள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. இது வெறும் வதந்தி மட்டுமே தான் என மறுபக்கம் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 68 படத்திற்கு என்ன தலைப்பு வரப்போகிறது என்று.
உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம் இதுதான்.. நயனின் ஃபிட்னஸ் சீக்ரெட்