வெளிவந்தது தளபதி 69 படத்தின் அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்
தளபதி 69
நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி69 ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துவிட்ட நிலையில் அவர் கடைசியாக நடிக்கும் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னையில் செட் அமைக்கப்பட்டு தளபதி69 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அனிமல் பட புகழ் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், தளபதி 69 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறதாம். மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அறிவிப்பாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கும் இந்தியா: ரூ.3100 கோடி ஒப்பந்தத்தின் இறுதி கட்டம் News Lankasri
