தளபதி 70 படம் இருக்கா ?.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்றது.
தற்போது, விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளாராம். தற்போது, விஜய் அவரது கடைசி படமான 69 - வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.
தளபதி 70
தற்போது, தளபதி 69 படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு அடுத்து விஜய் அவருடைய 70 - வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, இந்தியில் மெகா ஹிட் படமான ஜவான் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லீயோடு இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அட்லீ இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
அந்த படத்தில் தான் கேமியோ கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
