ரஜினியின் தலைவர் 171 பட கதையை விஜய்யுடன் கூறிய லோகேஷ் கனகராஜ்.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா
லியோ - தலைவர் 171
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் காத்திருக்கிறது.
லோகேஷ் - விஜய் கூட்டணி என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீது இருக்கும் நிலையில், லியோ படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 171.
சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளிவந்தது. மாஸ்டர், விக்ரம், லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
தலைவர் 171 கதை கேட்ட விஜய்
இந்நிலையில், தலைவர் 171 படத்தின் கதையை தளபதி விஜய்யிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
அதற்கு விஜய் '10 நிமிடத்தில் எனக்கு இப்படியொரு கதையை பிடித்துபோனதே இல்லை, சூப்பர்' என லோகேஷ் இடம் கூறியிருக்கிறார் விஜய். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.