அதை மட்டும் செய்யாதீங்க: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்
விஜய்
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல அருகில் இருக்கும் மாநிலங்களில் எக்கச்சட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
மேலும் விஜய் பேரிடர் மக்களுக்கு உதவிகள் செய்வது என்றாலும் தனது மக்கள் இயக்கம் மூலமாக தான் உதவி செய்து வருகிறார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டணி நடந்தபோது, விஜய் சொன்ன அறிவுரை என்ன என்பதை செயலாளர் எல்லோருக்கும் கூறி இருக்கிறார்.
'முதலில் குடும்பத்தை பாருங்க, அடுத்து தொழில், அதற்கு பிறகு தான் சேவை என்பது. சேவையை வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து செய்யுங்கள், அதற்காக கடன் வாங்க வேண்டாம்' என்று விஜய் அறிவுரை கூறி இருக்கிறாராம்.

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் கடைசியாக பார்த்த திரைப்படம் எது தெரியுமா?