ஜனநாயகன் படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்
ஜனநாயகன்
பிரம்மாண்ட பொருட் செலவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனின் ப்ரீ புக்கிங் தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 36 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன் மாபெரும் வசூல் சாதனையை ப்ரீ புக்கிங்கிலேயே படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
முதல் விமர்சனம்
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை அண்மையில் சில முக்கிய நபர்கள் பார்த்துள்ளனர். பார்த்துவிட்டு படம் குறித்து தங்களின் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் படத்தை பார்த்த முக்கிய புள்ளிகள் சிலர், விஜய்யின் திரை வாழ்க்கையில் சிறந்த படம் இதுதான் என கூறியுள்ளனர். படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும், மூன்று மணி நேரம் உள்ள இந்த திரைப்படம் எங்குமே போர் அடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு ஜனநாயகன் படம் விறுவிறுப்பாக உள்ளதாக முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.