ஜனநாயகன் படம் எப்படி வந்திருக்கு தெரியுமா.. 2026 பொங்கல் செம கலெக்ஷன் காத்திருக்கு
ஜனநாயகன்
தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.
இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படம் வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் எப்படி வந்திருக்கு
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் இதுவரை எடுத்த காட்சிகள் அனைத்தையும் எடிட் செய்து, அதற்கு ஒரு டம்மி ஆர் ஆர் ம்யூசிக் போட்டு இயக்குநர் ஹெச். வினோத் தனது குழுவுடன் இணைந்து படம் பார்த்துள்ளார்களாம்.
அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது, நன்றாக வந்துள்ள காரணத்தில் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri
