தளபதி விஜய் குறித்து ஒற்றை வார்த்தையில் பதிலளித்த லாஸ்லியா! என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா, இவர் தற்போது Friendship என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.
மேலும் தற்போது லாஸ்லியா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தளபதி விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் தளபதி விஜய் என்றால் "மாஸ்" என கூறியுள்ளார்.