தளபதி விஜய்யின் படத்தை இயக்குவேன் என முன்பே கூறிய நெல்சன் - முக்கிய நபர் சொன்ன தகவல்..

vijay Nelson shiva aravind
By Jeeva Oct 16, 2021 07:40 AM GMT
Report

இயக்குனர் நெல்சன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார். இவர் அறிமுக இயக்குனராக இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர், மக்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனைகள் படைத்து வருகிறது.

இதனால் தற்போது நெல்சன் இயக்கி வரும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் டாக்டர் படத்தில் கிளி கதாபாத்திரத்தில் நடித்தவரும், நெல்சனின் கல்லூரி நண்பருமான சிவா அரவிந்த் இயக்குனர் நெல்சன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் "சினிமாவிற்கு வருவதற்கு முன், நெல்சன் காலேஜ் படிக்கும் போது சொன்னான் நான் சினிமாவுக்கு போனா ஒரு நாள் விஜய் சார் வச்சு படம் பண்ணுவேன். அவன் பயங்கரமான தளபதி வெறியன்" என கூறியுள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US