கில்லியின் மாபெரும் வசூல் வேட்டை ரீ ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜய்யின் சச்சின்.. எப்போது தெரியுமா
ரீ ரிலீஸ்
சமீபகாலமாக ரீ ரிலீஸ் ரீ ரிலீஸ் பெருகி கொண்டே இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, தளபதி போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரீ ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி ரூ. 25 கோடி வரை வசூல் செய்யததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கில்லி ரீ ரிலீஸ்-ஐ தொடர்ந்து தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மற்றொரு படத்தையும் 2025ல் ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் சச்சின்.
சச்சின்
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகும். நகைச்சுவையிலும் சரி, காதலிலும் சரி சச்சின் படம் பலருடைய மனதை கவர்ந்த ஒன்று தான்.
இந்த நிலையில், வருகிற 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் தாணு. மிகப்பெரிய ப்ரோமோஷன் உடன் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.