தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சித்தார்த் ! எந்த படத்தில் தெரியுமா?
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சித்தார்த்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, சிவப்பு மஞ்சள் பச்சை என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியானது. இவர் நடிப்பில் அடுத்து டக்கர் என திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சித்தார்த் முன்னணி நடிகரான தளபதி விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம், விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் தான் சித்தார்த் நடித்திருக்க வேண்டியது. நடிகர் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஷங்கர் அணுகியதே சித்தார்த்திடம் தானாம்.
ஆனால் சில காரணங்களால் சித்தார்த் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.