தலவன் திரை விமர்சனம்
மலையாள சினிமாவிற்கு இந்த வருடம் பொற்காலம் தான் போல. ஏற்கனவே ரூ 1000 கோடி வசூலை மலையாக சினிமா இந்த வருடம் கடந்து விட்ட்து. இந்த விலையில் Jis Joy இயக்கத்தில் பிஜு மேனன் , ஆசிப் அலி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தலவன் படம் எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
பிஜு மேனன் எப்போதும் மிகவும் கடுமையாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. எல்லோரிடமும் மிக கடுமையாக நடந்து கொள்பவர். இந்த ஸ்டேஷன்க்கு மற்றோரு கடுமையான போலீஸ் அதிகாரியாக ஆசிப் அலி வருகிறார்.
இருவருமே மிக கடுமையானர்வர்கள் என்பதால், ஈகோ முட்டிக்கொள்கிறது, இந்த நிலையில் பிஜு மேனன் மனைவியை ஒருத்தன் கத்தியால் வெட்டுகிறான், இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பிஜு மேனன் வீட்டில், தன மனைவியை வெட்டியவனின் மனைவியின் உடல் சடலமாக இருக்க, அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இந்த தலவன் .
படத்தை பற்றிய அலசல்
முதலில் கிரைம் படம் என்றாலே மலையாள சினிமாவிற்கு அல்வா சாப்பிடுவது போல் தான். கலக்கியுள்ளார், அதிலும் பிஜு மேனன், ஆசிப் அலியின் எதார்த்தமான நடிப்பு, அசர வைக்கின்றது. படத்தின் முதல் பாதி யார் ஏன் இப்படி செய்தார்கள், யார் செய்திருப்பார்கள் என்று வரும் காட்சி எல்லாம் அட போடா வைக்கின்றது.
சின்ன சின்ன கதாபாத்திரம் கூட நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். ஈகோ என்ற ஒரு கான்செப்ட் வைத்து மலையாள சினிமாவில் பல ஜானர் படங்கள் வருகிறது, அதை ஹிட் அடிக்கவும் செய்கின்றனர்.
ஆனால், படத்தில் எத்தனையோ ப்ளஸ் இருந்தும் இரண்டாம் பாதியில் இந்த விஷயங்களுக்கு அவர்கள் சொல்லும் சில காரணங்கள் கொஞ்சம், ஏற்க முடியவில்லை தான்.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை.
நடிகர்களில் யதார்த்தமான நடிப்பு.
டெக்கனிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி சில காட்சிகள் ஏற்க முடியாமல் போனது.
மொத்தத்தில் கிரைம் திரில்லர் ரசிகர்களை மற்றோருமொரு விருந்து வைத்துள்ளது மலையாள சினிமா.
3.25/54