பணத்திற்காக தான், அனிருத்திற்கு கிடைக்கிறது... அதிரடியாக பேசிய தமன்
தமன்
தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு எப்படி பஞ்சம் இல்லையோ அதேபோல் இசையமைப்பாளர்களுக்கும் தான்.
ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் தமன். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் ஓஜி திரைப்படம் வெளியாகி வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது, அகண்டா 2 படமும் செம ஹிட் தான்.
விஜய்யின் தீவிர ரசிகரான இவர் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார், தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

பிரபலத்தின் பேட்டி
இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் தனது திரைப்பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், தெலுங்கில் பிறமொழி இசையமைப்பாளர்கள் பலரும் பணத்திற்காக இசையமைக்க வருகிறார்கள், தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள்.
ஆனால் தமிழில் அப்படியில்லை, அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அவ்வளவு எளிதாக பிறமொழி இசையமைப்பாளர்களை பயன்படுத்த மாட்டார்கள். அனிருத்திற்கு எளிதாக தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் எனக்கு தமிழில் அப்படி இல்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் குறைவாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.
