விஜய் படத்தில் அது இல்லாம இருக்குமா.. வாரிசு பட ரசியத்தை சொன்ன இசையமைப்பாளர் தமன்
விஜய்யின் அடுத்த படமான வாரிசு தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே அதில் நடித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வாரிசு படத்திற்காக இசையமைத்து வரும் தமன் இந்த படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என பேட்டி அளித்து இருக்கிறார்.

இயக்குனர் வம்சி மற்றும் தமன் இருவருமே விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்றும், விஜய்க்காக தங்களது பெஸ்ட்டை கொடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இது குடும்ப செண்டிமெண்ட் படம் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் டான்ஸ் ஆடும் அளவுக்கு மாஸ் பாடல்கள் வருமா என கேட்டதற்கு, "கண்டிப்பாக ஆடுவாங்க.. அதெப்படி விஜய் சார் படம் என்றால் இயக்குனர் விட்டுவிடுவார்" என தமன் பதிலளித்து இருக்கிறார்.