திருமணமே வேண்டாம், பெண்கள் முன்பு போல இல்லை.. இசையமைப்பாளர் தமன்
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பிறகு இசையமைப்பாளராக களமிறங்கி கலக்கி வருபவர் தமன். தமன் பாடகி ஸ்ரீவர்தினி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் யாரும் திருமணமே செய்ய வேண்டாம் என ஆண்களுக்கு அட்வைஸ் கூறி இருக்கிறார்.
பெண்கள் முன்பு போல இல்லை
திருமணம் செய்ய எது சரியான வயது என சொல்லுங்க என தொகுப்பாளர் கேட்க. "இப்போது யாரும் திருமணம் செய்ய கூடாது என நான் விரும்புகிறேன்."
"மிகவும் கடினமாக இருக்கிறது. பெண்கள் எல்லோரும் independent ஆக இருக்க விரும்புகிறார்கள். யாருக்கு கீழும் இருக்க விரும்பவில்லை. அப்படி ஒரு பெண்கள் சமுதாயத்தை நாம் இழந்துவிட்டோம்."
"கொரோனாவுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம் தான் அதற்கு முக்கிய காரணம். ரீல்ஸ்களில் வருவது எல்லாம் பாசிட்டிவ் ஆகவே இருக்கிறது, வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை பற்றி யாரும் ரீல்ஸ் வெளியிடுவது இல்லை."
"நான் யாருக்கும் திருமணம் செய்ய பரிந்துரை செய்ய மாட்டேன். மிகவும் கடினமாக இருக்கிறது" என கூறி இருக்கிறார் தமன்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
