தயாரிப்பாளர் மீது வழக்கு - நடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு

master chef tamanna
By Karthick Raja Oct 22, 2021 06:45 PM GMT
Report

சர்வதேச டிவி நிகழ்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பை ஆரம்பித்தது.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.

சில வாரங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்கு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இப்போது தமன்னா தெலுங்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்முறையற்ற ஒழுக்கம் காரணமாகவும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் அளவிற்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்.

ஒரே இரவிலேயே அவருடனான தொடர்புகளை அவர்கள் துண்டித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US