யாரும் கவலைப்படாதீங்க, எனக்கு கஷ்டமாக உள்ளது- எலிமினேட் ஆன பிறகு லைவ் வீடியோவில் தாமரை கூறிய விஷயம்
பிக்பாஸ் 5வது சீசனின் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, யார் வெற்றிப்பெற போகிறார் என்ற விஷயம் இன்னும் சில தினங்களில் நமக்கு தெரியவரும்.
அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள், போட்டியாளர்கள் எந்த ஒரு டாஸ்க் இல்லாமல் படு ஜாலியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தாமரை முதன்முறையாக லைவ்வாக ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து வந்துள்ளார்.
அதில் தாமரை பேசும்போது, நான் எலிமினேட் ஆனதால் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல இருங்கள். நான் உங்கள் வீட்டு பிள்ளை. சிலர் வருத்தமுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
உங்களால் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இதுநாள் வரை இருந்தேன் அதற்கு நன்றி, அந்த வீட்டில் இருந்ததே நான் வெற்றிப்பெற்ற மாதிரி தான் என பேசியுள்ளார்.