கைகலப்பாக மாறிய பிரியங்கா - தாமரை சண்டை! ரெட் கார்டு கிடைக்குமா?
டிக்கட் டு ஃபினாலே வெற்றி பெறுவதற்காக டாஸ்குகள் பிக் பாஸ் வீட்டில் தொடங்கி இருக்கிறது. நேற்றய டாஸ்கில் நிரூப் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று முட்டையை காப்பாற்றும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதில் போட்டி தொடங்கிய உடன் அமீர் மற்றும் பிரியங்கா கூட்டணி சேர்ந்து தாமரையின் முட்டைகளை உடைத்தனர்.
அதன் பின் வரிந்துகட்டிக்கொண்டு பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். நீயா நானா என அவர்கள் சண்டை போட்ட போது இருவரும் மாறி மாறி தள்ளிக்கொண்டனர்.
தாமரை தன்னை தாகிவிட்டதாக பிரியங்கா பிக் பாஸிடம் புகார் கூறினார். தாமரைக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றவேண்டும் என்று தான் பிரியங்கா புகார் கூறினார். இந்த பிரச்சனையில் இனி என்னவெல்லாம் நடக்குமோ?