விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் தாமரை- எந்த தொடர் பாருங்க
தாமரை செல்வி
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு தமிழக மக்களிடம் பெரிய அங்கீகாரம் பெற்றவர் தாமரை செல்வி. நாடக கலைஞரான இவர் தனது சொந்த ஊரில் மேடை நாடகங்களில் நடித்து அதில் கிடைக்கும் வருவாயில் தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
பின் பிக்பாஸில் கலந்துகொண்ட இவர் நன்றாக விளையாடி இறுதிவரை வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அதிலும் நன்றாக விளையாடி வந்தார்.
அதன்பிறகு தனது கணவருடன் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருந்தார்.
சீரியலில் தாமரை
தற்போது தாமரை செல்வி புதியதாக சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது, காரணம் அப்படி ஒரு புகைப்படம் தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி, நாயகனுடன் தாமரை எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதோடு அவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்,
நடிகை சோனியா அகர்வாலா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
