அது கெட்ட வார்த்தை கிடையாது.. பிக் பாஸ் அல்டிமேட் தாமரை சொல்லும் மோசமான விளக்கம்
பிக் பாஸ் 5 முடித்த கையேடு சில வாரங்களில் தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் தாமரை செல்வி போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் பிக் பாஸ் 5ல் பங்கேற்றபோது பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. அவர் இறுதி போட்டிக்கு முந்தைய வாரத்தில் தான் வெளியே சென்றார்.
தற்போது நடந்து வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் 24 மணி நேரமும் ஷோ பார்ப்பதால் ரசிகர்களுக்கு போட்டியாளர்கள் பற்றிய அதிக விவரங்கள் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக தாமரை அதிகம் கெட்ட வார்த்தைகள் வீட்டில் பேசி வருகிறார்.
அது பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய தமரை தான் பேசிய மயிறு, கிறுக்கு போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தையே இல்லை என தெரிவித்து இருக்கிறார். இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 26, 2022
▶️8 pm onwards..#Day27 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/yPNsjcUceG