பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை யாரை சந்தித்துள்ளார் பாருங்க- கலக்கல் புகைப்படம்
பிக்பாஸ் 5வது சீசன் இந்த வருட ஆரம்பத்தில் முடிவுக்கு வந்தது, டைட்டிலையும் ராஜு கைப்பற்றினார். அவர் வெற்றி பெற்றதற்கு மக்கள் அனைவருமே வாழ்த்து கூறி இருந்தார்கள்.
அவருக்கு அடுத்தபடியாக தாமரையை மக்கள் அதிகம் கொண்டாடினார்கள், அவர் மிகவும் கஷ்டப்பட்டவர் நிகழ்ச்சி மூலம் பெரிய இடம் பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை
5வது சீசனில் தாமரை வெற்றிபெறவில்லை, அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள், ஆனால் அவரை விட கடுமையாக விளையாடி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுவிட்டார்.
ஆனால் இறுதிக்கட்டம் வரை போராடிய தாமரைக்கு மக்களின் ஆதரவு பெறுகியுள்ளது.
பிக்பாஸ் பிறகு தாமரை
தாமரைக்கு தனது குடும்பம், கலை தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
அவர் குடும்பத்துடன் நிகழ்ச்சி பிறகு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.