வெளியேற்றப்பட்ட தாமரை! அவருக்கு வாக்குகள் குறைய இது தான் காரணமா?
இந்த வாரம் யார் எலிமிநேஷன் என பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அது தாமரை தான் என உறுதியான தகவல் தற்போது வெளிவந்து இருக்கிறது.
நாடக நடிகையாக இருந்து பிக் பாஸ் என்றாலே என்ன என தெரியாமல் ஷோவுக்குள் வந்து தற்போது கிட்டத்தட்ட இறுதி வரை வந்துவிட்டார் தாமரை. நிரூப், அமீர் உள்ளிட்டோர் பைனலுக்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது தாமரையை எலிமினேட் செய்து இருப்பது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
தாமரைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். விளையாட தெரியாமலேயே அவர் இவ்வளவு தூரம் வந்தது பெரிய விஷயம் எனவும் கூறி வருகின்றனர்.
அமீர், நிரூப் தவிர தற்போது வீட்டுக்குள் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் தாமரை தான் குறைவான வாக்குகள் பெற்று இருக்கிறார். அவருக்கு வாக்குகள் குறைய என்ன காரணம் என பார்த்தால் அவர் கடந்த சில வாரங்களாகவே நிரூப்புக்கு ஆதரவாக இருந்து வருவது தான்.
நேற்று நடந்த டாஸ்கில் கூட நிரூப்பை பைனலுக்கு அனுப்ப வேண்டும் என்று தான் அவர் பேசி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.