அர்ஜுன் 2வது மகள் திருமணத்திற்கு தம்பி ராமைய்யா அவரது மகன் செல்லாதது ஏன்?... வெளிவந்த தகவல்

By Yathrika Nov 04, 2026 08:25 AM GMT
Report

அர்ஜுன்

ஆக்ஷன் கிங்ஙாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் அர்ஜுன். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்துள்ளவர் சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா. இதில் ஐஸ்வர்யா சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில படங்கள் நடித்தார், அதன்பின் தம்பி ராமைய்யா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார்.

2வது மகள் அஞ்சனா, பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு பெண்களுக்கான ஹேண்ட் பேக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அர்ஜுன் 2வது மகள் திருமணத்திற்கு தம்பி ராமைய்யா அவரது மகன் செல்லாதது ஏன்?... வெளிவந்த தகவல் | Thambi Ramaiah Absent In Arjun Daughter Marriage

காரணம் என்ன

அஞ்சனா, இத்தாலி நாட்டை சேர்ந்த இஷாய் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க கடந்த அக்டோபர் 19ல் ஸ்பெயின் நாட்டில் திருமணம் நடந்தது.

அர்ஜுன் 2வது மகள் திருமணத்திற்கு தம்பி ராமைய்யா அவரது மகன் செல்லாதது ஏன்?... வெளிவந்த தகவல் | Thambi Ramaiah Absent In Arjun Daughter Marriage

இந்த திருமணத்தில் தம்பி ராமைய்யா மற்றும் அவரது மகன் கலந்துகொள்ளவில்லை, ஆனால் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு 15 நாட்கள் கழித்து திருமணம் நடந்துள்ளது, அங்கு யாரையும் வேறு தெரியாது.

எனவே சென்னையில் வேலை இருப்பதால் இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள், மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லையாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US