தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்.. அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வார நாட்களில் இரவு 7மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
வில்லன் அர்ஜுன் பற்றிய உண்மை கோதை மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்துவிட்டாலும் தற்போது மேலும் அவரது வில்லத்தனம் உச்சத்தை தொட்டு இருக்கிறது.
வீட்டை விட்டு வெளியேறிய கோதை
அர்ஜுனை வீட்டை விட்டு அனுப்பலாம் என பார்த்தால், வீடு மற்றும் கம்பெனி உள்ளிட்ட மொத்த சொத்தும் ராகினி பெயரில் திருட்டுத்தனமாக அர்ஜுன் மாற்றி வைத்து இருக்கிறார்.
அந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி ஆகும் கோதை, 'சொத்து தானே நீங்களே வெச்சுக்கோங்க' என சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரொமோவில் இந்த் ட்விஸ்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.