தமிழும் சரஸ்வதியும் நடிகையா இப்படி.. படுகவர்ச்சியான உடையில் வெளியிட்ட போட்டோ
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தீபக் ஹீரோவாகவும், நக்ஷத்திரா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னா கதாபாத்திரம் கதையில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து இருக்கிறது.
தமிழ் திருமணம் ஆகாதவர் என நினைத்து அவர் மீது மேக்னா ஆசைப்பட்ட நிலையில், அவருக்கு சரஸ்வதி உடன் திருமணம் ஆகிவிட்டது என அறிந்து தற்போது வில்லியாக மாறி இருக்கிறார் மேக்னா.
கிளாமர் போட்டோ
மேக்னாவாக நடித்து வருவது நடிகை அக்ஷிதா போப்பையா தான். அவர் இதற்கு முன் சன் டிவி தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழும் சரஸ்வதியும் மூலமாக மேலும் பாப்புலர் ஆகி இருக்கிறார் அவர்.
தற்போது அக்ஷிதா படுகிளாமர் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.