தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் அர்ஜுனா இது?- சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்க, அடையாளமே தெரியலையே
தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த தொடர் ஆரம்பத்தில் என்னவோ மிகவும் விறுவிறுப்பாக நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் போக போக ஒரே கான்செப்டை வைத்துக்கொண்டு தொடரை ஓட்டி வருகிறார்கள். வில்லன் அர்ஜுன் நாயகனுக்கு எல்லா தொல்லையும் கொடுக்கிறார், வெளியே சிக்காமல் எல்லா வேலையும் செய்கிறார்.
தற்போது மேக்னாவை கொன்ற வழக்கில் சரஸ்வதியும் சிக்கிக்கொண்டு வருகிறார், எப்போது உண்மை வெளிவரும் என தெரியவில்லை.
அர்ஜுன்
இந்த தொடரில் வில்லனாக நடிக்கும் அர்ஜுனின் நிஜ பெயர் ரயான். சென்னையை சேர்ந்த இவர் வேலம்மாள் பள்ளியில் தான் படிப்பு முடித்துள்ளார், விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.
மாடலிங் பக்கம் திரும்பியவர் MR.Teen India runerup ஆகவும் இவர் தேர்வாகி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறார்.
இவர் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரயானா இது பள்ளி படிப்பின்போது இருந்ததற்கும் இப்போதும் ஆளே செமயாக மாறியுள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.