கொலை செய்யப்பட்ட மேக்னா.. மாட்டிக்கொள்ளும் சரஸ்வதி! - தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி ப்ரொமோ
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் இதுவரை ஒன்றாக இருந்த மேக்னா தமிழுக்கு எதிரியாக மாறி இருப்பது தான்.
வில்லன் கேங் உடன் சேர்ந்து மேக்னா அடியாட்களை அனுப்பி தமிழை தாக்கியதாக சரஸ்வதி அவரிடம் சென்று சண்டை போடுகிறார். கொன்றுவிடுவேன் என கோபத்திலும் மிரட்டிவிட்டு வருகிறார்.
கொலை செய்யப்படும் மேக்னா
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தன்னை சிலர் கொலை செய்ய துரத்துவதாக மேக்னா சரஸ்வதியும் கால் செய்கிறார். அந்த இடத்திற்கு சரஸ்வதி சென்று பார்க்கும்போது மேக்னாவை யாரோ கொலை செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
சரஸ்வதி அந்த கத்தியை எடுக்க, அவர் தான் கொலை செய்தார் என அங்கு வரும் தொழிலாளர்கள் நினைத்துவிடுகின்றனர்.
அதனால் தற்போது சரஸ்வதி பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார். மேக்னா உயிர் பிழைப்பாரா?