முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்- இப்படியொரு அதிர்ச்சியான கிளைமேக்ஸா?
தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சியில் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்முறையாக ஜோடி சேர கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் தமிழும் சரஸ்வதியும்.
எஸ்.குமரன் அவர்களின் இயக்கத்தில் தயாராகி வந்த இந்த தொடர் ஆரம்பத்தில் விறுவிறுப்பின் உச்சமாக இருந்தது.
கோதை-சந்திரகலா என இருவரை வைத்து கதை நகர்ந்து வர பாதியில் அர்ஜுனா தமிழா என்று மாறியது. அப்படியே இவர்களை வைத்தே கதை நகர்ந்துகொண்டு வர தற்போது சீரியல் முடிவுக்கும் வந்துள்ளது.
அதிர்ச்சி கிளைமேக்ஸ்
தற்போது கதையில் ஈவு இரக்கம் இல்லாத ஒரு மோசமான கதாபாத்திரமாக காட்டப்பட்டு வருகிறது.
வில்லத்தனத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த அவரது தாயே தற்போது தனது மகனை கொலை செய்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டு அவரது கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறது.
ரோபோ ஷங்கர் மனைவியின் உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்.. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இந்திரஜா கணவர்!!
இதுவரை அம்மா சொன்னதை கேட்டு பல தவறுகள் செய்துவந்த அர்ஜுன், தற்போது அம்மாவின் வார்த்தை மீறி குழந்தையை வைத்து தவறுகள் செய்ய துணிந்ததால், அவரை கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார் அர்ஜுனின் அம்மா.
பொதுவாக ஒரு தொடரை முடிக்கிறார்கள் என்றால் இறுதியில் வில்லனை நல்லவராக காட்டுவார்கள், ஆனால் இதில் வில்லனை முடித்துள்ளார்கள், இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.