Thamma படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
Thamma
இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Thamma. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குர்ரானா, நவாஸுதீன் சித்திக், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை MHCU என கூறப்படும் Maddock Horror Comedy Universe-ல் எடுத்துள்ளனர். இதில் Munjya, Bhediya, Stree ஆகிய படங்கள் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது thamma இந்த யூனிவெர்சில் இணைந்துள்ளது.
முதல் நாள் வசூல்
நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், Thamma திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.