முதல் நாள் தண்டேல் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தண்டேல்
தரமான கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிக்கும் சில கதாநாயகிகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் வெளிவந்த வெற்றிபெற்றது.

அதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ளது தண்டேல் திரைப்படம். நாகசைதன்யாவுடன் இணைந்து இப்படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் உருவான இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், தண்டேல் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் நாள் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் இப்படம் வசூல் செய்துள்ளது.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu