தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா
தங்கலான்
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படங்கள் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
டிமான்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி 2. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 34.8 கோடி வசூல் செய்துள்ளது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan