வசூல் வேட்டை நடத்திவரும் விக்ரமின் தங்கலான் படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
தங்கலான் படம்
கோலார் தங்கவயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு அண்மையில் வெளியான படம் தங்கலான்.
பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எடுத்துள்ள இந்த படத்தில் விக்ரம், மாளவிகா, பார்வதி, பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் நடித்துள்ளனர்.
மிகவும் அதிகமான பொருட் செலவில் உருவான இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் மூலம் ஒரு வரலாற்றை குறிப்பாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை நம்கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
அதிலும் இப்படத்தில் பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்து படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 59 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
