தங்கலான் படத்தின் கதை இதுதானா! சும்மா வெறித்தனமா இருக்கே
தங்கலான்
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
படத்தின் கதை இதுதானா
கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் KGF-ல் விக்ரம் தனது ஆட்களுடன் தங்கம் தேடும் வேளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது அமானுஷ்யமான விஷயங்கள் மூலம் இவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விவரமாக வெளிவந்த தகவலில், விக்ரம் தனது ஆட்களுடன் வசித்து வருகிறார். அப்போது வெள்ளைக்காரன் ஒருவர் வந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபடும்படி கோரிக்கை வைக்க, அதன்பின் விக்ரம் தனது சில ஆட்களுடன் இணைந்து தங்கம் தேடும் பணிகளில் ஈடுபடுகிறார்.
இந்த சமயத்தில் தான் அமானுஷ்யம் ஒன்று இவர்களை தாக்குகிறது. அவர் தான் மாளவிகா மோகனன், இப்படத்தில் அவர் ஆர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தங்கலான் படத்தின் ட்ரைலரில் கூட, அவரை ஒரு அமானுஷ்யம் போல் தான் கட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
