அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தங்கலான் படத்தின் டீசர்..
தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவுள்ள திரைப்படம் தங்கலான். கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த அறிவிப்பு வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோ மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முதல் முறையாக இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்டாத லுக்கில் விக்ரம் தங்கலான் படத்தில் தோன்றியுள்ளார்.
இதுவே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, Daniel Caltagirone உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டீசர்
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தங்கலான் படத்தின் டீசர் இதோ..
Thangalaan Teaser Launch Event :