இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் டிவியின் தங்கமகள் சீரியல்.... கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ இதோ
தங்கமகள் சீரியல்
விஜய் டிவியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய தொடர் பாக்கியலட்சுமி.
இன்றோடு இந்த நெடுந்தொடர் முடியப்போகிறது, பாக்கியா-கோபி இருவரும் பிள்ளைகளுக்கு அப்பா-அம்மாவாக இருப்பதோடு தங்களது வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறோம் என முடிவு எடுக்கிறார்கள்.
இறுதியில் பாக்கியா, ராதிகா, செல்வி, கோபி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து தரமான கருத்தை கூறுகிறார்கள்.
கிளைமேக்ஸ்
தற்போது பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பான தங்கமகள் சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் யுவன் மயில்சாமி மற்றும் அஷ்வினி ஆனந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக போகும் ஸ்பெஷல் எபிசோடுடன் இந்த தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம்.
முத்துப்பாண்டி தனது காதலை ஹாசினியிடம் வெளிப்படுத்த அவர்களுக்கு திருமணம் நடக்கும் காட்சிகளுடன் தொடர் முடியும் என கூறப்படுகிறது.