மாட்டிக்கொண்ட தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் தான் சொன்ன பொய்யை காப்பாற்ற மேலும் பல பொய்களை சொல்லி வருகிறார்.
நல்ல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அவர் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையை அவர் செய்கிறார். இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
சிக்கிய தங்கமயில்
இந்நிலையில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு செந்தில் வருகிறார். மளிகை சாமான் டெலிவரி செய்ய வந்த அவரை பார்த்து தங்கமயில் அதிர்ச்சி ஆகிறார்.
அவர் உள்ளே ஓடிச்செல்ல, மளிகை சாமான் இறக்கி வைக்க வேண்டும் என சொல்லி அவரை அழைக்கிறார் இன்னொரு பெண்.
தங்கமயில் வெளியில் செல்லும்போது அங்கு செந்தில் அவரை பார்த்துவிட வசமாக சிக்கிவிடுகிறார். இனி எப்படி சமாளிப்பார் அவர்? எபிசோடுகளில் பார்க்கலாம்.
ப்ரொமோ இதோ.