உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடந்த வாரம் காந்திமதியை தனது வீட்டிலிருந்து சக்திவேல் வெளியேற்றினார். இதை பார்த்த கோமதி தனது அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். ஆனால், இந்த விஷயம் முத்துவேலுக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தபின் என்ன நடக்குமோ, அதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
தங்கமயில் கர்ப்பம்
இந்த நிலையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கவிருப்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தனக்கு தலைச்சுற்றுகிறது, தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருக்கிறது என தங்கமயில் கூறுகிறார்.

உடனடியாக அவரை மருத்துவரிடம் மீனா அழைத்து செல்ல, மருத்துவர் மயிலை பரிசோதித்து பார்த்துவிட்டு, தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என சந்தோஷமான செய்தியை கூறுகிறார். தான் கர்ப்பமாக இருப்பதை கேட்டு மகிழ்ச்சியடையும் தங்கமயில், இதை உடனடியாக சரவணனிடம் கூறவேண்டும் என அவரை பார்க்க செல்கிறார்.

கோவிலில் சரவணனை பார்த்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மயில் கூறவும், யார் குழந்தை இது, நீ கர்ப்பமாக இருந்தாலும் அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சரவணன் கூறிவிடுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியில் நிற்கிறார் தங்கமயில்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri