சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் தங்க மீன்கள்... புரொமோ எப்போது?
சன் டிவி
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களில் மிகவும் ஹிட்டானது பூவே பூச்சூடவா சீரியல்.
இந்த தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரேஷ்மா இந்த தொடருக்கு பின் அபி டெய்லர் என்ற சீரியல் நடித்தார், ஆனால் அவ்வளவாக ஓடவில்லை.
பின் விஜய் டிவி பக்கம் வந்தவர் கிழக்கு வாசல் என்ற சீரியல் நடித்தார், ஆனால் சீக்கிரமே முடிந்துவிட்டது. அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நடித்தார், சீரியலுக்கு ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
ஆனால் சில காரணங்களால் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
புதிய தொடர்
இப்போது நடிகை ரேஷ்மா முரளிதரன் தங்கமீன்கள் என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்க, இவர்களுடன் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்த அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனராம்.
தற்போது என்ன தகவல் என்றால் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) இந்த தொடரின் புரொமோ வரும் என்றும் செப்டம்பர் 29 முதல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்படுகிறது.