பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்! சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தாணு
பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்னும் சில தினங்களில், வரும் 30-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. முன்பதிவும் தமிழகம் முழுக்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பொன்னியின் செல்வன் வெளியாகும் முன்பு நானே வருவேன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கிறது.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பொன்னியின் செல்வன் உடன் இப்படம் வெளியாவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தாணு
அசுரன் திரைப்படம் வெளியானது இதே போல் பூஜை பண்டிகை நாட்களில் தான், எனவே இப்படத்தை அதே போல் 9 நாட்கள் பண்டிகை விடுமுறை தேதியில் வெளியிட சில மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்து விட்டேன்.
மேலும் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஏற்கனவே இதே போல் வெளியாகி வெற்றியடைந்து இருக்கின்றன. உதாரணமாக பேட்ட - விஸ்வாசம், ஜில்லா - வீரம் உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம்.
சமூக வலைதளங்களின் மூலம் பரவிய பிரச்சனை தான் இது, எங்கள் இரண்டு திரைப்படங்களின் தரப்பிலும் இந்த ஒரு பிரச்சனையும் கிடையாது என கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் எஸ். தாணு.
பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம்
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)