அட்ஜஸ்ட் பண்ண சொல்லி ஓப்பனாக கேட்டாங்க.. சீரியல் நடிகை சந்தித்த பிரச்சனை
சினிமா துறையில் வாய்ப்பு தேடும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினாலும், அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் நடிகை தாரணி அளித்திருக்கும் பேட்டியில் தானும் அந்த பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட்
சில படங்களில் தங்கை ரோல்களில் நடித்துப்போது எந்த பிரச்சனையும் வரவில்லை, அதன் பின் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போது பிரச்சனை தொடங்கியது. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் அதற்காக அணுகினார்கள். தங்கச்சி ரோலில் நடித்த உன்னை ஹீரோயின் ஆக்கி இருக்கிறோம் என சொல்லு அதை கேட்டார்கள்.
ஆனால் நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை, எங்கு வேண்டுமானாலும் கேட்டு பாருங்க என சொல்ல மறுத்துவிட்டேன் என தாரணி கூறி இருக்கிறார்.

கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை?