VJ விஷால் நடிக்கிறார்.. காதல் உண்மையா? வெளியில் வந்து தான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன்: தர்ஷிகா
பிக் பாஸ் 8ம் சீசன் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த வருடம் லவ் ட்ராக் எதுவும் இல்லையே என்கிற குறையை VJ விஷால் மற்றும் தர்ஷிகா ஆகியோர் தீர்த்து வைத்தனர்.
அவர்கள் பிக் பாஸ் வீட்டில் மிக நெருக்கமாகவே இருந்து வந்த நிலையில் இருவருமே காதலில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது.
தர்ஷிகா எலிமினேட் ஆன போது அவரது செயின் ஒன்றை விஷாலுக்கு நியாபக அர்த்தமாக கொடுத்துவிட்டு வந்தார். அந்த அளவுக்கு அவர்கள் நெருக்கமாக இருந்தனர்.
எல்லாமே நடிப்பு..
தர்ஷிகா தற்போது வெளியில் வந்து விஷால் பற்றி கொடுத்திருக்கும் பேட்டியில், அவர் மீது காதல் அப்போது இருந்தது உண்மை தான் என கூறி இருக்கிறார்.
அவரை பற்றி வெளியில் வந்து தான் தெரிந்துகொண்டதாகவும், விஷால் நன்றாக தன்னிடம் நடித்து இருக்கிறார் என்றும் தர்ஷிகா கூறி இருக்கிறார்.
"நீ அழகாய் இருக்கிறாய் என விஷால் என்னிடம் வந்து கூறினார். ஆனால் மொக்க மூஞ்சி என பின்னாடி பேசி இருக்கிறார். எது உண்மை என எடுத்துக்கொள்வது என தெரியவில்லை" என தர்ஷிகா கோபமாக கேட்டிருக்கிறார்.
You May Like This Video

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
