டாட்டூ போடுவதற்கு இதுதான் இடமா?- ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவை திட்டிதீர்க்கும் ரசிகர்கள்
சன் தொலைக்காட்சியில் இதுவரை லட்சக் கணக்கான சீரியல்கள் வெற்றிப் பெற்றுள்ளன. இப்போது அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இடையில் கதையாசிரியர்கள் மாற்றம் ஏற்படும் போது மட்டும் சீரியல் TRP குறைகிறது, பின் மீண்டும் பழைய மாதிரி முதல் இடத்திற்கே வந்துவிடுகிறது.
அப்படி தான் அண்மையில் இந்த சீரியல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் தனது முதல் இடத்தை பிடித்துவிட்டது. இந்த சீரியல் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா.
சீரியலை தாண்டி பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்திலும் எப்போதும் ஆக்டீவாக உள்ளார். அண்மையில் அவர் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.
காரணம் அவர் டாட்டூ ஒன்றை தனது உடம்பில் பச்சை குத்தியுள்ளார். அந்த டாட்டூ போட வேறு இடம் இல்லையா என கமெண்ட் செய்து திட்டி வருகிறார்கள்.