The Bad Boys Ride or Die திரை விமர்சனம்
பேட் பாய்ஸ் என்ற சீரியஸுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் வில் ஸ்மீத், மார்டின் கூட்டணியில் 4வது பாகமாக வெளிவந்துள்ள இந்த பேட் பாய்ஸ் ரைட் ஆர் டை படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
வில் ஸ்மீத் தன் பல வருட தவம் முடிந்து ஒரு வழியாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய, அந்த திருமண நிகழ்ச்சியிலேயே அவரின் கூட்டாளி மார்டின் மாராடைப்பு வந்து கீழே விழுகிறார்.
அவரை மருத்துவமனையில் சேர்த்து எல்லாம் சரி ஆகி வெளிவரும் போது, பேட் பாய்ஸ் டீம்-ன் ஹெட் கடந்த பாகத்தில் இறந்திருப்பார், அவர் போதை கும்பலோட தொடர்புடையவர் என மீடியாவில் அரசாங்கமே சொல்கிறது.
இதனால் கோபமான இந்த பேட் பாய்ஸ் குழு தன் பாஸ் மீது விழுந்த பழி-யை தீர்க்க களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
வில் ஸ்மீத் இவருக்கு வயது என்று ஒன்று இருக்கா என்பது போல் தான் கேட்க தோன்றுகின்றது, படம் முழுவதும் செம ஸ்மார்ட் ஆக அதிரடி ஆக்ஷனில் பட்டையை கிளப்புகிறார்.
அதோடு கூடவே வரும் கூட்டாளி மார்டின்-ம் வழக்கம் போல் ஒன் லைன் ஜோக்கில் அதகளம் செய்கிறார், படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கடையில் சாப்பிட செல்லும் போது, திருட வந்த ஒருவனிடம் பேசும் காட்சியிலேயே மார்டினின் காமெடி தொடங்கிவிட்டது.
இந்த படத்தில் ஆக்ஷனை விட பேமிலி ஆடியன்ஸுகான பேமிலி செண்டிமெண்ட்-ம் உள்ளது. வில் ஸ்மீத் மகன் மீண்டும் இதில் வர அவருடன் மன்னிப்பு கேட்பது, தன் மனைவியை வில்லன் கடத்தி வைக்க அவரை காப்பாற்ற போராடுவது என நிறைய செண்டிமெண்ட் இருந்தாலும் அது எதுவுமே பெரிதாக கவரவில்லை என்பதும் உண்மை.
இந்த மாதிரி படங்கள் என்றாலே அதிரடி ஆக்ஷன், கார் சேஸிங், பைக் சேஸிங் என்று பல சண்டை காட்சிகள் வரும். ஆனால், இதில் படம் ஆரம்பத்தில் சில மணி நேரம் பொறுமையை சோதிப்பது போல் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரமும் பெரியளவில் ஈர்க்கவில்லை, வழக்கமான தமிழ் படம் வில்லன் போல் குடும்பத்தை கடத்தி, ஆள் இல்லாத பங்களாவிற்கு வர சொல்வது என நம்ம ஊரிலேயே அழிந்து போன ட்ரெண்ட்-யை ஹை டெக் டெக்னாலாஜியில் எடுத்து வைத்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு கவரும் படி உள்ளது, அதிலும் ஒரு துப்பாக்கி சண்டை என்றால் எதோ அந்த துப்பாக்கியிலேகே கேமராவை கட்டி விட்டது போல் இருக்கும் காட்சிகள் சபாஷ்.
க்ளாப்ஸ்
டெக்னிக்கல் விஷயங்கள்.
மார்டின் காமெடி கவுண்டர்கள்
கிளைமேக்ஸ் சண்டை காட்சி
பல்ப்ஸ்
பெரிதும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.